ஏறாவூர் வன்முறை சம்பவத்துடன் தொடர்புடைய 12 சந்தேக நபர்கள் கைது!

Date:

நாட்டில் ஏற்படுத்தப்பட்ட வன்முறை மற்றும் வன்முறையுடன் இடம்பெற்ற பொருட்கள் கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர் .

கிழக்குமாகாண பிரதிப்பொலிஸ் மா அதிபரின் கட்டளையின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட பிரதம பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரின் வழிகாட்டலின் மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடுப்பு விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி பி எஸ் .பி .பண்டார தலைமையிலான மூன்று பொலிஸ் குழுவினர் இணைந்து மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் நடாத்தப்பட்ட வன்முறை மற்றும் பொருட்கள் கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அந்தவகையில் மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் நடாத்தப்பட்ட வன்முறையின் போது பலகோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டமை மற்றும் பொருட்கள் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் இதுவரையில் 12 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் .

மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை கைது செய்யும் நடவடிக்கையின் கீழ் பொலிஸாரினால் வழங்கப்பட்டுள்ள பதிவுகள் மூலம் பொதுமக்கள் தகவல்களை மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடுப்பு விசாரணை பிரிவுக்கு வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர் .

Popular

More like this
Related

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...

Rebuilding Sri Lanka வேலைத்திட்டம் நாளை அங்குரார்ப்பணம்.

நாட்டை மீள கட்டியெழுப்பும் Rebuilding Sri Lank வேலைத்திட்டத்தை செயற்திறனுடன் முன்னெடுக்கும்...

வெனிசுவேலாவின் பதில் ஜனாதிபதி நான்தான்: டிரம்ப் அதிரடி.

வெனிசுவேலா நாட்டின் பதில் ஜனாதிபதி தான்தான் என்பதை வெளிப்படுத்தும் விதமாக அமெரிக்க...