பல்கலைக்கழக மாணவர்கள் கொழும்பில் ஆர்ப்பாட்ட பேரணி: பொலிஸாரால் கண்ணீர்ப் புகை வீச்சு

Date:

கொழும்பு கோட்டை லோட்டஸ் வீதிக்கு அருகில் அரசாங்கத்திற்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்ட பேரணியின் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர்.

“கோட்டா – ரணில் சதி அரசாங்கத்தை அகற்றுவோம்!” என்ற தொனிப்பொருளில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் சம்மேளனம் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து மாபெரும் கண்டன ஊர்வலத்தை ஆரம்பித்தனர்.

வீட்டிற்குச் செல்லுங்கள் கோட்டா” – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகுமாறும், நாட்டில் ஊழல் நிறைந்த அரசியல் அமைப்பாகக் கருதப்படுவதை முடிவுக்குக் கொண்டு வருமாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன், மக்கள் வாழ்வதற்கு நிவாரணம் வழங்குமாறும், காலிமுகத்திடல் தாக்குதலுக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்யுமாறும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த சில வாரங்களாக கொழும்பில் இளைஞர் எதிர்ப்பாளர்கள் பல போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். இந்தப் போராட்டத்தில் இலங்கை முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...