ஹோட்டல் தங்குமிடங்களை வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை !

Date:

பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்வதற்காக ஹோட்டல் தங்குமிடங்களை வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு கோரிக்கை விடுத்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

கொழும்பில் இருந்து வெளியில் சென்றுள்ள சில பாராளுமன்ற உறுப்பினர்கள் வீடு திரும்ப விரும்பியதாகவும் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக அதனைச் செய்ய முடியாமல் போனதாகவும் சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.

“எனவே, அவர்கள் பாராளுமன்ற நடவடிக்கைகளில் கலந்துகொள்வதற்காக கொழும்பில் தங்குவதற்கு ஹோட்டல் ஒன்றை முன்பதிவு செய்யுமாறு என்னிடம் கோரியுள்ளனர்,” என்று அவர் மேலும் கூறினார்.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்வதில் உள்ள சிரமங்களை ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே சமூக ஊடகங்கள் ஊடாக குரல் கொடுத்து வருகின்றனர்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மானிய விலையில் எரிபொருள் வழங்கப்படுவது தொடர்பான அறிக்கைகள் இன்று பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட நிலையில் சபாநாயகர் இதனை தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் மானிய விலையில் எரிபொருள் வழங்கப்படவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெளிவுபடுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...