அம்பாறையில் ஆளும்கட்சி எம்.பிகளின் வீடுகளை தீயிட்ட சம்பவம் தொடர்பாக இதுவரை 11 பேர் கைது!

Date:

அம்பாறையில் ஆளும் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் மற்றும் நகரசபை முதல்வர் உட்பட அவர்களது உறவினர்களது வீடுகளை தீக்கிரையாக்கி மற்றும் சேதமாக்கிய சம்பவம் தொடர்பாக நேற்று வியாழக்கிழமை (19) 4 பேரை மேலும் கைது செய்ததுடன் இதுவரை 11 பேரை கைது செய்துள்ளதாக அம்பாறை தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

நாட்டில் ஏற்பட்ட மே 9 திகதி வன்முறை சம்பவத்தையடுத்து அம்பாறையிலுள்ள ஆளும்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான வீரசிங்க, விமல திஸாநாயக்கா மற்றும் அவரது மகனின் வீடு , அம்பறை நகரசபை முதல்வர் ஆகியோரது வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து இச் சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கடந்த திங்கட்கிழமை 7 பேரை கைது செய்து அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து 23ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து அந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட மேலும் 4 பேரை நேற்று கைது செய்ததையடுத்து இதுவரை 11 கைது செய்துள்ளதாகவும் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...