மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தனது உயிரை மாய்த்துக்கொண்ட நோயாளி!

Date:

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவந்த நோயாளி ஒருவர் வைத்தியசாலை விடுதி மலசலகூடத்தில் வைத்து நேற்றிரவு (22) தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

வவுணதீவு, நாவற்காடு பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய சிவலிங்கம் தட்சணாமூர்த்தி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் ஒரு மனநோயாளி என்றும் அதற்கான சிகிச்சையை பெற்றுக்கொள்வதற்காகவே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்துள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

விடுதியில் உள்ள நோயாளிகளை வைத்தியர் பார்வையிட்டுச் சென்றதன் பின்னர் குறித்த நபர் மலசலகூடம் சென்றிருந்தார். நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததையடுத்து, அவருக்கு உதவியாக இருந்த உறவினர் கதவைத் திறந்து போது, உடுத்திருந்த சாரத்தைப் பயன்படுத்தி, மலசலகூட ஜன்னல் கம்பியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.

இதனையடுத்து நீதிமன்ற உத்தரவை பெற்று சடலத்தை பிரேத பரிசோதனைக்கு ஒப்படைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

மின்சார கட்டண திருத்தம்: பொது மக்களின் ஆலோசனைகள் இன்றுடன் நிறைவு!

இலங்கை மின்சார சபை இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையத்திடம் (PUCSL) சமர்ப்பித்த...

தாஜூதீன் கொலை செய்யப்பட்ட காலத்தில் பாதுகாப்பு அமைச்சில் பணிபுரிந்த கஜ்ஜா: குற்றப் புலனாய்வுத் துறை விசாரணையில் தகவல்

வசிம் தாஜுதீன் கொலை நடந்தபோது, ​​மீகசரே கஜ்ஜா என்று பிரபலமாக அறியப்பட்ட...

2030 சவூதி விஷன்; அனைத்து விசா வகையினருக்கும் உம்ரா அனுமதி

புனித உம்ரா கடமையை எளிதாக நிறைவேற்றும் பொருட்டு சவூதி அரசாங்கம் சிறப்புத்...

திஹாரிய தன்வீர் அகடமி ஏற்பாடு செய்த ‘நபிகள் நாயகம்’ பற்றிய கண்காட்சி இன்றும் நாளையும்

‘தர்மத்தின் மூலம் நல்லிணக்கம்’ என்ற தலைப்பில், நாடுகளிடையே நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் வளர்க்கும்...