குச்சவெளி பிரதேசத்தில் புதைக்கப்பட்டிருந்த கைக்குண்டு ஒன்று மீட்பு!

Date:

திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் புதைக்கப்பட்ட நிலையில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

குச்சவெளி அந்நூரிய்யா பாடசாலை வளாகத்தினுள் அமைந்துள்ள மைதானத்தில் நேற்று (25) குறித்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது…

அந்நூரிய்யா பாடசாலை வளாகத்தின் மைதானத்தில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருக்கும் போது புதைக்கப்பட்ட நிலையில் குறித்த கைக்குண்டினை கண்டதாகவும் குறித்த சிறுவர்கள் கைக்குண்டு என்று தெரியாமல் அதனை எடுப்பதற்கு முயற்சி செய்துள்ளதாகவும் பின்னர் பிரதேச வாசிகள் குச்சவெளி பொலிசாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து குறித்த கைக்குண்டு மீட்பதற்கான ஏற்பாடுகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

மேலும் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய குறித்த கைக்குண்டினை செயலிழக்க செய்வதற்காக விசேட அதிரடிப் படையினருக்கு தகவல்கள் வழங்கியதை அடுத்து அவர்கள் அங்கு வந்ததாகவும், மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...