கோட்டகோகமவின் 50வது நாளை முன்னிட்டு இன்று (28) சனிக்கிழமை நடத்தப்படவிருக்கும் ஆர்ப்பாட்ட பேரணி தொடர்பில் பொலிஸார் நீதிமன்ற உத்தரவை பெற்றுள்ளனர்.
பொலிஸ் அறிக்கையின்படி, கோட்டை பகுதியில் உள்ள பல வீதிகள் மற்றும் அரச நிறுவனங்களுக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.