எரிபொருள் வரிசையை குறைக்கும் வகையில் தடையில்லா மின்சாரம் வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற பாராளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு மாதாந்தம் 100 மில்லியன் டொலர்கள் தேவைப்படுவதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இந்த வருடத்தின் முதல் காலாண்டில் இலங்கை மின்சார சபையின் நட்டம் 65 பில்லியன் ரூபாவாகும் என அமைச்சர் தெரிவித்தார்.