இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத்தினருக்கு நீதிமன்றத்தினால் 14 நாட்களுக்கு தடையுத்தரவு

Date:

இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் அணில் ரஞ்சித் இந்துவர, செயலாளர் தம்மிக்க விமலரத்ன ஆகியோர், எதிர்வரும் 14 நாட்களுக்கு தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவினை பரிசீலித்த கொழும்பு மாவட்ட நீதிபதி பூர்ணிமா பரணகம இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மேலும் சம்பந்தப்பட்ட பிரதிவாதிகளுக்கு உடனடியாக தொலைபேசி மூலம் தெரிவிக்குமாறு மாவட்ட நீதிமன்றப் பதிவாளருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இலங்கை மின்சார சபையினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டினை விசாரித்த மாவட்ட நீதிபதியினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், வழக்கை எதிர்வரும் 22ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை, நேற்று நள்ளிரவு முதல் மின்சார விநியோகம் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டது.

எனினும், இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் பல்வேறு விடயங்களை முன்வைத்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தது.

எனினும், ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையைடுத்து, குறித்த பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக கைவிடப்பட்டமை குறிப்படத்தக்கது.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...