பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் அனுசரணையுடன் கணினிகள், விளையாட்டுப் பொருட்கள், உலர் உணவுகள், தையல் இயந்திரங்கள் மற்றும் பிக்குகளுக்கு வசிக்கும் வீடொன்றையும் நன்கொடையாக வழங்கும் நிகழ்வொன்று இடம்பெற்றது.
இந்த நிகழ்வு மாத்தளை கொங்கலஹமுல்ல கிபலராம விகாரையில் நேற்று (09) இடம்பெற்றது.
பாகிஸ்தானின் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் உமர் ஃபரூக் புர்கி, மற்றும் பாகிஸ்தான் தூதரக அதிகாரி அப்சல் மரிக்கார் ஆகியோர் கலந்துகொண்டு இதனை வழங்கி வைத்தனர்.
இதேவேளை பாடசாலை மாணவர்களுக்கான தகவல் தொழில்நுட்ப நிலையம் அமைப்பதற்கான கணனிகள், பெண்களுக்கான தொழிற்பயிற்சி நிலையம் அமைப்பதற்கான தையல் இயந்திரம்,வழங்கப்பட்டது
கௌடுபெல்ல மகா வித்தியாலய மாணவர்களுக்கான கணனி, உதைபந்தாட்ட, கிரிக்கெட் உபகரணங்கள் என்பன பாடசாலை அதிபரிடம் வழங்கி வைக்கப்பட்டன.