மீண்டும் முட்டை மற்றும் கோழி இறைச்சி விலை அதிகரிக்கும் சாத்தியம்!

Date:

முட்டை மற்றும் கோழி இறைச்சி என்பனவற்றின் விலைகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என அகில இலங்கை கோழிப்பண்ணை வர்த்தகர்கள் சங்கம் மற்றும் இலங்கை விலங்குணவு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.
விலங்குகளுக்கான உணவுகளின் விலைகள் அதிகரித்துள்ளமையால், தமது தொழில்துறையில் பல பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளதாகவும், தமது தொழில்துறையை முன்னெடுப்பதற்கு நிவாரணம் வழங்குமாறும் அந்த சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.
தற்போது சந்தையில் முட்டை ஒன்றின் விலை 50 ரூபாவாக உள்ளது. நகர்ப்புறங்களில் உள்ள சிறு குழந்தைகளில் சுமார் 30 சதவீதமானோர் புரதச் சத்து குறைப்பாட்டுடன் உள்ளனர்.
கிராமப் புறங்களில் இந்த நிலைமை இதைவிடவும் மோசமாக இருக்கும். இந்த நிலையில், பொதுமக்களுக்கு முட்டை மற்றும் கோழி இறைச்சி என்பனவற்றை பெற்றுக் கொள்ள முடியாவிட்டால், புரதச் சத்து குறைப்பாடு ஏற்படும்.
எரிபொருள் மற்றும் போக்குவரத்துப் பிரச்சினையால், முட்டை மற்றும் கோழி இறைச்சி என்பன சந்தைக்கு கிடைக்கும் அளவு குறைவடைந்துள்ளது. இதன் காரணமாக, நுகர்வோரின் கேள்விக்கு ஏற்ப அவற்றை விநியோகிக்க முடியாது என்றார்.

Popular

More like this
Related

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...

Rebuilding Sri Lanka வேலைத்திட்டம் நாளை அங்குரார்ப்பணம்.

நாட்டை மீள கட்டியெழுப்பும் Rebuilding Sri Lank வேலைத்திட்டத்தை செயற்திறனுடன் முன்னெடுக்கும்...

வெனிசுவேலாவின் பதில் ஜனாதிபதி நான்தான்: டிரம்ப் அதிரடி.

வெனிசுவேலா நாட்டின் பதில் ஜனாதிபதி தான்தான் என்பதை வெளிப்படுத்தும் விதமாக அமெரிக்க...