‘ஒரு நாடு – ஒரே சட்டம்’ என்ற தலைப்பில் ஜனாதிபதி செயலணி தயாரித்த அறிக்கை நேற்று அதன் தலைவர் மற்றும் உறுப்பினர்களால் சான்றளிக்கப்பட்டது.
அதன்படி, இந்த அறிக்கையில் செயலணித் தலைவர் கலகொடஅத்தே ஞானசார தேரர் மற்றும் உறுப்பினர்கள். இந்த அறிக்கை விரைவில் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இலங்கைக்குள் ‘ஒரே நாடு; ஒரே சட்டம்” என்பதைச் செயற்படுத்துவதற்கான ஆய்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு சட்டமூலமொன்றைத் தயாரிப்பதற்கான பொறுப்பு, “ஒரே நாடு ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதிச் செயலணி”க்கு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.