ஹிருணிகாவை உருவ கேலிக்குட்படுத்தி அவமதிக்க வேண்டாம்: சமூக ஊடக ஆர்வலர்களுக்கு பிரதமர் வேண்டுகோள்

Date:

மூன்று பிள்ளைகளின் தாயான ஹிருணிக்கா பிரேமச்சந்திரவின் புகைப்படங்களை வெளியிட வேண்டாம் என சமூக ஊடக ஆர்வலர்களிடத் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதேநேரம், ஒழுக்கமான சமுதாயத்தில் தாய்மை அவமதிக்கப்படக் கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஹிருணிகா பிரேமச்சந்திர நேற்றைய தினம் பிரதமரின் தனிப்பட்ட இல்லத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது எடுக்கப்பட்ட ஒழுக்கமற்ற புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதற்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், எல்லாவற்றிற்கும் முன் தாய்மை என்ற கருத்து மதிக்கப்பட வேண்டும்,அவர் அரசியல் விஷயமாக தனது இல்லத்திற்கு வந்திருப்பதாகவும், அது தொடர்பான சித்தாந்தத்தின் மூலம் அதைக் கையாள வேண்டும் என்றும் கூறினார்.

அவரது தாய்மையை அவமதிக்கும் வகையில் யாரும் நடந்து கொள்ளக் கூடாது எனவும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.

இதேவேளை ஹிருணிகா பிரேமசந்திரன தனது சமூக வலைத்தளத்தில் இந்த விடயம் தொடர்பாக கருத்தொன்றை பதிவிட்டுள்ளார்.

இதன்போது, எனது மார்பகங்கள் குறித்து நான் பெருமிதம் அடைகிறேன்! அதனூடாக மூன்று அழகிய குழந்தைகளுக்கு நான் தாய்ப்பால் ஊட்டியுள்ளேன். நான் அவர்களை வளர்த்து, அவர்களுக்கு சௌகரியமளித்து, எனது ஒட்டுமொத்த உடலையும் அவர்களுக்காக அர்ப்பணித்தேன்.

(பொலிஸாருடனான கைகலப்பு காரணமாக) வெளித்தோன்றிய எனது மார்பகங்களை வைத்து கிண்டலும் கேலியும் செய்பவர்கள், தாம் குழந்தைகளாக இருக்கும் போது தமது தாய்மார்களின் மார்பகக் காம்புகளிலிருந்து தாய்ப்பால் அருந்தியவராகவே இருப்பர் என நான் உறுதியாக நம்புகின்றேன்.

எப்படியென்றாலும், எனது மார்பகங்களைப் பற்றி நீங்கள் கதைத்து, மீம்ஸ்களை உருவாக்கி, நகைத்து இருக்கும் போது, எங்கோ ஒரு வரிசையில் இந்த தேசத்தின் ஒரு குடிமகன் இறந்திருப்பான் என்ற செய்தியை அறிந்திருப்பீர்கள்!’- ஹிருணிகா பிரேமச்சந்திர பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...