அங்குருவாதொட்ட, படகொட பகுதியில் இன்று (23) உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசலுக்காக வரிசையில் 5 நாட்களாக காத்திருந்த டிப்பர் சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அஹங்கம, சங்கரத்ன மாவத்தையைச் சேர்ந்த 63 வயதுடைய வீரப்புலி சுனில் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ஐந்து நாட்களாக டீசலை எதிர்பார்த்து டிப்பர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், டிப்பருக்குள் அவர் இறந்து கிடப்பதைக் கண்ட ஒருவர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேரேம், உயிரிழந்தவர் நீண்ட காலமாக டீசலுக்காக காத்திருந்ததாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.
மேலும், உயிரிழந்த நபர் மிகவும் வயதானவர், நாங்கள் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக வெளிவரவுள்ளது. அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு அவர் தனது லொறிக்கு டீசல் பெற்றுக்கொள்வதற்காக நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தார், ‘என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.