இந்த வாரம் பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவிப்பு!

Date:

நகர்ப்புற பாடசாலைகளை இந்த வாரமும் இடம்பெறாது என கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி, ஜூன் 27 முதல் ஜூலை 01 வரையிலான வாரத்தில் மேல் மாகாணத்தில் கொழும்பு பகுதி மற்றும் அருகிலுள்ள நகரங்களிலும் மற்றும் ஏனைய மாகாணங்களின் முக்கிய நகரங்களில் உள்ள பாடசாலைகள் நடைபெறாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை பாடசாலை வாரம் செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய கிழமைகளில் காலை 7.30 மணி முதல் 1.30 மணி வரை நடைபெறும் என கல்வி அமைச்சு முன்னதாக அதிபர்களுக்கு அறிவித்திருந்தது.

போக்குவரத்து சிரமம் காரணமாக இந்த நாட்களில் பாடசாலைக்கு வராத ஆசிரியர்களுக்கு தனியார் விடுமுறை தினங்களாக பதிவு செய்ய வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், அந்த வாரத்தில் பாடசாலைகளை நடத்துவது தொடர்பில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், மாகாண கல்விச் செயலாளர்கள் மற்றும் மாகாண கல்விப் பணிப்பாளர்கள் மாகாண ஆளுநர்களுக்கு அறிவித்து அதற்கேற்ப நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்துவார்கள்.

க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் ஜூன் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டால், இரண்டு வாரங்களுக்குப் பின்னர் பருவப் பரீட்சைகள் நடத்தப்படும்.

Popular

More like this
Related

வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதிகளுக்கு நீர் வெட்டு !

அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதிகளில் இன்று...

ஹிரோஷிமா தினம்: மனித வரலாற்றின் ஆறாத வடுவும் அணுஆயுதங்களற்ற உலகத்திற்கான குரலும்

இரண்டாம் உலகப் போரின் உச்சக்கட்டம். 1945-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6-ஆம் தேதி,...

பாடசாலைகளுக்கு மூன்றாம் தவணை விடுமுறை: கல்வி அமைச்சு!

2026 ஆம் ஆண்டுக்கான அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுசரணையின் கீழ்...

கொழும்பில் சர்வதேச பட்டத் திருவிழா 2026!

கொழும்பில் எதிர்வரும் ஓகஸ்ட் 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள...