கேன்களில் எரிபொருள் ஏற்றிவந்த வாகனம் பொதுமக்களால் மடக்கிப் பிடிப்பு: எரிபொருள் நிலையம் ஒன்றினூடாக இடம்பெறும் மோசடி அம்பலம்!

Date:

சம்மாந்துறையில் சந்தேகத்துக்கிடமான முறையில் வடி ரக வாகனமொன்றில் 18 கேன்களில் டீசலை கொண்டு செல்ல முற்பட்டபோது பொதுமக்களால் மடக்கிப் முற்றுகையிட்டுள்ளனர்.

குறித்த எரிபொருள் நிலையம் ஒன்றினூடாக பல சந்தர்ப்பங்களில் இவ்வாறான பல சம்பவங்கள் நடை பெறுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று (27) நள்ளிரவு 12.30 மணியளவில் வடி ரக வாகனம் சம்மாந்துறை மணிக்கூட்டுகோபுரத்தால் கேன்களுடன் செல்வதை எரிபொருளுக்காக காத்திருந்த பொதுமக்கள் அவதானித்தாகதெரிவித்தனர்.

குறித்த வாகனத்தை சந்தேகத்தின் அடிப்படையில் மீண்டும் வரும் போது சம்மாந்துறை மணிக்கூட்டு கோபுரத்தடியில் எரிபொருள் பெறுவதற்காக காத்திருந்த பொதுமக்கள் குறித்த வாகனத்தைசுற்றி வளைத்து தடுத்து நிறுத்தி கேன்களை பரிசோதித்த போது சுமார் 18 கொள்கலன்களில் டீசல் நிரப்பப்பட்டு இருப்பதை அறிந்த பொதுமக்களுக்கும் வாகன சாரதிக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.

பின்னர் பொது மக்கள் பொலிஸாருக்கு தகவலை வழங்கியதன் பின் அங்கு வருகைதந்த சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எச் ஜெயலத் மற்றும் பொலிஸார் வடி ரக வாகனத்தை கைப்பற்றி அதில் உள்ள கேன்களில் டீசல் இருப்பதை உறுதிப்படுத்திய பின்னர் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்துக்கு வடி ரக வாகனம் கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

Popular

More like this
Related

தேசிய மீலாத் கண்காட்சியில் பெரியமுல்லை அஹதியா மாணவர்களின் மகத்தான பணி!

நடந்து முடிந்த 42வது தேசிய மீலாத் விழா பல்வேறு சிறப்பம்சங்களோடு மிகக்...

தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவில் முஸ்லிம் பிரதிநிதியை நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் MCSL கோரிக்கை

தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவில் முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உறுப்பினர்...

வறட்சியால் இலங்கையின் பல மாவட்டங்கள் பாதிப்பு: பால் உற்பத்தி வீழ்ச்சி, குடிநீர் தட்டுப்பாடு மற்றும் வனவிலங்குகள் அவதி

இலங்கையில் நிலவும் கடுமையான வறட்சியான காலநிலை காரணமாக அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை...