புதிய கட்டண திருத்தம் அறிவிக்கப்படும் வரை தனியார் பஸ் சேவை மட்டுப்படுத்தப்படும்!

Date:

டீசல் விலை அதிகரிப்பு காரணமாக பஸ் கட்டணங்கள் திருத்தம் செய்யப்படாமையால் இன்று தனியார் பஸ் சேவைகள் 90 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாக தனியார் பஸ் சேவையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதற்கமைய புதிய கட்டண திருத்தம் அறிவிக்கப்படும் வரையில் தனியார் பஸ் சேவைகள் குறைந்தபட்சமாகவே இடம்பெறும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை மாகாணங்களுக்கிடையிலான பேருந்து சேவைகளும் சுமார் 75 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் விஜித குமார கருத்து வெளியிட்டார்.

எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக கொள்கலன் வாகன கட்டணங்கள் இன்று நள்ளிரவு முதல் 10 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை ஒன்றிணைந்த கொள்கலன் வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

நேபாள வெளியுறவு அமைச்சருடன் விஜித்த ஹேரத் தொலைபேசி உரையாடல்: உதவிக்கு தயார்!

நேபாளத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து நிலவும் சூழல் குறித்து, அந்நாட்டு...

நேபாள மக்களின் துயரத்தில் பங்கெடுக்கும் இலங்கை – ஜனாதிபதி அனுதாபம்!

நேபாளத்தின் கடும் வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து ஜனாதிபதி அநுர குமார...

கடற்பிரதேசங்களில் பலத்த காற்று

புத்தளம் முதல் கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலான கடற்பகுதிகளில்...

விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பும் சர்வதேச முயற்சியில் கிண்ணியா மாணவி நூரி இணைவு: 27ஆம் திகதி இந்தியா பயணம்!

உலகளாவிய ரீதியில் முதல் முறையாக பெண் மாணவிகள் இணைந்து விண்கலமொன்றை விண்வெளிக்கு...