பேருவளையில் வீட்டுத் தோட்ட வழிகாட்டல்களும், மரக்கன்றுகள் விநியோகிக்கும் நிகழ்வும்!

Date:

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் பேருவளை மன்றமும், ரம்யா லங்கா நிறுவனமும் இணைந்து ‘உதலு சவிய’ திட்டத்தின் கீழ் வீட்டுத் தோட்ட உருவாக்கத்திற்கான வழிகாட்டல்களும், மரக்கன்றுகள் விநியோகிக்கும் அங்குராப்பண நிகழ்வும் நேற்று இடம்பெற்றது.

இந்த நிகழ்வு பேருவளை, அம்பேபிடிய, அஸாபிர் ஜன்னாஹ் அல்குர்ஆன் பாடசாலையில் நடைபெற்றது.

இதில் பேருவளை பிரதேசத்தில் அமைந்துள்ள ஐந்து பாடசாலைகள், பேருவளை அஸாபிர் ஜன்னாஹ் அல்குர்ஆன் பாடசாலை மற்றும் இக்ராஃ தொழில்நுட்பக் கல்லூரியிலும் இத்திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பான வழிகாட்டல்களை பெற்றுக்கொள்ள இந்நிறுவனங்களைச் சேர்ந்த பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பேருவளை பொலிஸ் நிலைய பொறுபதிகாரிகள், பேருவளை குருந்துவத்தை விகாரை பிரதானிகள் ஊர்பிரமுகர்கள் மற்றும் பேருவளை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஆண், பெண் ஊழியர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பொலித்தீன் பைகளுக்கு கட்டணம்!

பொலித்தீன் பாவனையால் ஏற்படும் சூழல் பாதிப்பைக் குறைப்பதற்கு வேலைத்திட்டமொன்றை வகுக்கக் கோரி,...

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின்...

மாணவனால் தாக்கப்பட்ட ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!

மொனராகலையில் உள்ள அரச பாடசாலையொன்றின் மாணவர் ஒருவரால் தாக்கப்பட்டதில் ஆசிரியர் சிறு...

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...