மகிந்த மருத்துவமனையில் அனுமதி? : ‘சமூக வலைதளங்களில் வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை’

Date:

இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்க்ஷ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளை அவரது அலுவலகம் மறுத்துள்ளது.

முன்னாள் பிரதமரின் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வெளியான செய்திகளை நிராகரித்து, முன்னாள் பிரதமரின் செயலாளர் கீத் காசிலிங்கம் தனது டுவிட்டர் பதிவில்  வெளியிட்டுள்ளார்.

அதில் ராஜபக்க்ஷ மருத்துவமனையில் இல்லை என்றும், அவர் அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படும் செய்திகள் தவறானவை என்றும் கூறியுள்ளார்.

ராஜபக்க்ஷ  கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இன்று சமூக ஊடகங்களில் காலை செய்திகள் வெளியாகின.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...