இலங்கையில் இன்று துல்ஹஜ் தலைபிறை தென்பட்டது: ஞாயிறு (10) ஹஜ்ஜுப் பெருநாள்!

Date:

துல் ஹஜ் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் மஹ்ரிப் தொழுகையின் பின்னர் இன்று நடைபெற்றது.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா உப பிறைக் குழுக்களின் அறிக்கையின் படி, இன்று 30 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை, வெள்ளிக்கிழமை இரவு ஹிஜ்ரி 1443 துல் ஹிஜ்ஜஹ் மாதத்தின் தலைப்பிறை தென்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அதேசமயம், நாட்டின் சில பகுதிகளில் துல் ஹஜ் மாத தலைப்பிறை இன்று (30) தென்பட்டுள்ளது.

இதன்போது, நாட்டின் சில பகுதிகளில் தலைப்பிறை தென்பட்டமைக்கான ஆதாரங்கள் கிடைத்ததாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்தது.

அதன்படி, இலங்கையில் எதிர்வரும் 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஈதுல் அழ்ஹா எனப்படும் ஹஜ் பெருநாளைக் கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...