அநுராதபுரம் தலாவ பிரதேசத்தில் காட்டு யானை மீது கெப் வண்டி மோதியதில் சிங்கள திரைப்பட நடிகரும், பிரபல அறிவிப்பாளருமான ஜாக்சன் ஆண்டனி உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.
விபத்தில் மூவரும் படுகாயமடைந்து அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதற்கிடையில், ஜாக்சன் அந்தோணி கொழும்பில் உள்ள தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு ஐ.சி.யு வில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
அநுராதபுரத்தில் இடம்பெற்ற தொலைக்காட்சி நாடகம் ஒன்றின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு அநுராதபுரத்திற்கு திரும்பும் போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதில் பழம்பெரும் நடிகர் ஜாக்சன் ஆண்டனியுடன் பயணித்த சமன் ஆண்டனி மற்றும் ஐரேஷ் ஆகியோர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த மூவரும் மொரகொட பிரதேசவாசிகள் மற்றும் தலாவ பொலிஸ் உத்தியோகத்தர்கள் இணைந்து அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.