முஸ்லிம்கள் மீது அக்கறையற்ற வளைகுடா ஷேக்குகள்:இராஜதந்திர தீயைக் கட்டுப்படுத்த துடிக்கும் இந்தியா!

Date:

-லத்தீப் பாரூக்

இஸ்லாத்தின் இறைதூதர் முஹம்மது நபி அவர்கள் மீது இந்தியாவின் ஆளும் கட்சியான பிஜேபியின் இரண்டு சிரேஷ்ட உறுப்பினர்கள் அவதூறான கருத்துக்களைத் தெரிவித்ததை அடுத்து, எண்ணெய் வளம் மிக்க வளைகுடா நாடுகளுடனான இந்தியாவின் உறவுகள் நெருக்கடியான ஒரு காலகட்டத்தை கடந்து கொண்டிருக்கின்றது.

வளைகுடா நாடுகளின் சுப்பர் மார்க்கெட்டுகளில் இருந்து இந்திய உற்பத்திகளை காலி செய்தததன் மூலமும், இந்திய உற்பத்திகளின் இறக்குமதியை பகிஷ்கரித்ததன் மூலமும், வளைகுடாவில் இருந்து இந்து தொழிலாளிகளை திருப்பி அனுப்புமாறு கோரிக்கைகளை முன்வைத்ததன் மூலமும் சில அரசுகள் சரியான நடவடிக்கைகளை எடுத்தது என்னவோ உண்மைகள் தான்.

ஆனால் நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான இந்து தொழிலாளர்களை திருப்பி அனுப்புமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை முற்றிலும் நியாயமற்றது.

காரணம் அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு பிஜேபியின் கிளையான ஆர்எஸ்எஸ் உடன் எவ்வித தொடர்புகளும் இல்லை.

ஆர்.எஸ்.எஸ் தான் இந்தியாவை முழுமையான இந்து ராஜ்ஜியமாக மாற்றும் முயற்சியில் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் தீர்த்துக் கட்டும் முயற்சியில் இறங்கி உள்ளனர்.

2004ல் பிரதமர் நரோந்திர மோடி தலைமையிலான மோடி அரசு பதவியேற்றது முதல் அரச ஆதரவுடன் கூடிய, முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் தலைவிரித்து ஆடத் தெபாடங்கின.

அதன் உச்ச கட்டமாவே முஹம்மது நபி அவர்களை அவமதிக்கும் பி.ஜே.பி தலைவர்களின் கூற்றுக்களும் அமைந்தன.

முஸ்லிம்களுக்கு எதிரான இன்றைய வன்முறைகளை புற்க்கணிப்பதற்கு அப்பால் முஸ்லிம்களை அந்த நாட்டில் பிரஜா உரிமை உற்பட எதுவுமே இல்லாதவர்களாக்கும் வகையில் சட்ட நடவடிக்கைகள் பலவற்றையும் அரசாங்கம் அறிமுகம் செய்துள்ளது.

எழுத்தாளரும் பத்தி எழுத்தாளருமான ஜே. வீரமன் ‘இராஜதந்திர ரீதியாக புயலாக வீசிக்கொண்டிருக்கும் தீயைக் கட்டப்படுத்த மோடியும் அவரது பிஜேபி அரசும் துடித்துக் கொண்டிருக்கின்றது. மத்திய கிழக்கு முழுவதும் இந்தத் தீ பரவி உள்ளது.

இஸ்லாத்தின் இறைதூதர் முஹம்மது நபி அவர்கள் மீது அவதூறு கூறும் வகையில் பிஜேபி இன் இரண்டு சிரேஷ்ட தலைவர்கள் தெரிவித்த கருத்துக்களே இதற்கு காரணம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அரசியல் பற்றி பரிச்சயம் உள்ளவர்கள் கடந்த சில வாரங்களாக இந்த நிலையை வெளிப்படையாக தெரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது.

வலுவானதோர் இந்து தேசியவாத நிகழ்ச்சி நிரலின் பக்க பலத்தோடு 2014ல் ஆட்சிக்கு வந்த இந்திய ஆளும் தரப்பு, தங்களது முஸ்லிம் சிறுபான்மை மக்களை மிகவும் திட்டமிட்ட முறையில் நசுக்கி வந்த போதிலும் சர்வதேச சமூகத்திடம் வசமாக மாட்டிக் கொண்ட முதலாவது சந்தர்ப்பமாக இது அமைந்தது.

இது ஒரு சிவில் யுத்தத்தை ஏற்படுத்தலாம் என்று பிரபல பொலிவூட் நடிகர் நஸீருத்தீன் ஷா எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை மோடி நிறுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தி உள்ளார்.

இல்லையேல் இது ஒரு சிவில் யுத்தத்தை ஏற்படுத்தி நாட்டை சின்னாபின்னமாக்கி விடும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இந்து மதகுருமார் பலர் முஸ்லிம்கள் இனரீதியாக படுகொலை செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

சட்டத்துக்கு அப்பாற்பட்ட இவ்வாறான அறிவிப்புக்கள் தொடர்பாக அரசு எதுவித நடவடிக்கையும் எடுக்காத நிலையிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான பின்னணியில் இந்தியாவில் முஸ்லிம்களின் எதிர்காலம் என்ன என்ற முக்கியமான கேள்வியையும் அவர் முன் வைத்துள்ளார்.

பத்தி எழுத்தளர் முஸ்தாக் றஹ்மத் எழுதி உள்ள குறிப்பில் இந்திய முஸ்லிம்கள் ஒரு விடயத்தை நினைவில் கொள்ள வேண்டும் வளைகுடா நாடுகள் இறைதூதர் முஹம்மது நபி அவமானப்படுத்தப்பட்டதைக் கண்டித்து தான் குரல்களை எழுப்பி உள்ளனவே தவிர இந்திய முஸ்லிம்களுக்கு ஆதரவாக அவர்கள் எதுவும் பேசவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இஸ்லாத்தையும் அதன் இறை தூதரையும் நிந்தனை செய்யும் வகையிலான கருத்துக்களை வளைகுடா நாடுகள் கண்டித்துள்ளதோடு இந்தியா அதற்காக மன்னிப்புக் கோர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளன.

இதற்கு சாதகமான வகையில் இந்த சர்வதேச தர்மசங்கடமான நிலை காரணமாக தற்போதைய ஆளும் தரப்பின் ஆதரவுடன் வெறித்தனமான இந்துத்வா வாக்காளர்களால தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்த இடைவிடாத இஸ்லாமிய வெறுப்பு பிரசாரம் தற்காலியமாக ஓய்ந்துள்ளது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்திய முஸ்லிம்கள் தமது வளைகுடா சர்வாதிகார சமயப் பங்காளிகளின் ஆதரவின்றி சிறப்பாக வாழும் நிலை வர வேண்டும்.

ஒரு சமய ரீதியான கருத்துக்கு தெரிவிக்கப்படும் கண்டனம் என்பது என்ன, தங்கள் மீது காட்டப்படும் அக்கறை தொடர்பாக தெரிவிக்கப்படும் கருத்து என்ன என்பதற்கான வித்தியாசத்தையும் இந்திய முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும் என முஸ்தாக் றஹ்மத் எழுதி உள்ளார்.

இந்திய முஸ்லிம்கள் கடந்த சில காலமாக அரசியல், பொருளாதார மற்றும் சமூக அரங்குகளில் அங்கீகாரம் மற்றும் விதிவிலக்கு என்பனவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய நிலையில் அவர்களுடைய வாழ்வுக்கும் வாழ்வாதாரத்துக்கும் தொடர்ச்சியான அச்சுறுத்தல் இருந்து கொண்டே இருக்கின்றது. முஸ்லிம்கள் மீதான தமது அலட்சியத்தை ஆர்எஸ்எஸ், பிஜேபி மற்றும் அதன் நேச அணிகள் ஒருபோதும் மறைத்துக் கொண்டதில்லை.

முஸ்லிம்களை இனசம்ஹாரம் செய்ய வேண்டும், முஸ்லிம் பெண்களை கற்பழிக்க வேண்டும், வர்த்தக ரீதியாக முஸ்லிம்களை பகிஷ்கரிக்க வேண்டும், இஸ்லாத்தின் மீதும், புனித குர்ஆன் மீதும், இறை தூதர் மீதும், அவரது மனைவிமார் மீதும் வெறுப்புணர்வை பரப்ப வேண்டும் என்ற ரீதியில் பல தஹம்சன்சத்கள் அல்லது கூட்டங்கள் இந்தியா முழுவதும் பரவலாக நடத்தப்பட்டு வருகின்றன.

இந்திய முஸ்லிம்கள் தமது போராட்டத்தை தாமே முன்னெடுக்க வேண்டும். உள்நாட்டு அரசியல் போராட்டம் ஒன்றில் களம் இறங்க சர்வதேச ஆதரவை நாடுவது அதில் தொடர்ந்து உறுதியாகப் பயணிக்கத் தேவையான வலுவான கால்களைக் கொண்டதாக அமையாது.

இந்திய சமூகக் கட்மைப்புக்கு அப்பால் இருந்து கோரப்படும் எந்த வகையான ஒரு உதவியும் இந்திய முஸ்லிம்களை மேலும் தீவிரமயமாகவே வெளிக்காட்டும். இந்தியாவுக்குள் நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்கள் கூட இந்தத் திசையிலேயே காட்டப்படும்.

இந்த விடயத்தில் மோடி அரசாங்கம் பிடிபடாமல் இருப்பதும் ஆச்சரியமானதல்ல. காரணம் அரபு நாடுகள் இந்த விடயத்தில் வேண்டும் என்றே கண்களை மூடிக் கொணடே இருக்கின்றன. இந்திய முஸ்லிம்களுக்கு எதிராக எந்தளவு அநியாயங்கள் இழைக்கப்பட்டாலும் சரியே.

முஸ்லிம்களை இந்தியா பாரபட்சமாக நடத்துவது பற்றி எந்தவொரு அரபு நாடும் இந்தியாவை இதுவரைக் கண்டித்து எதுவும் கூறவில்லை.

அரபு நாடுகளின் இந்த வேண்டப்படாத ஆதரவு இந்திய முஸ்லிம்கள் மீது எதிர்விளைவுகளை ஏற்படுத்துவதாகவும் அமையக் கூடும்.

பிஜேபியும் அதன் சங்பரிவாரங்களும் எந்தவொரு குற்றத்தையும் ஏற்றுக் கொண்டு மன்னிப்புக் கூடக் கோராமல் காலம் கடத்துவதில் கை தேர்ந்தவர்கள்.

அவர்கள் தம்மால் பாதிக்கப்பட்ட விளையாட்டை முஸ்லிம் நாடுகளுக்கு எதிராகக் கூட திருப்பி விடலாம். அதனால் அதன் முக்கிய விடயங்கள் ஒரு பறம் மடிந்து போய் விடும்.

மறுபுறம் நிர்க்கதியற்ற முஸ்லிம் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது அவர்கள் தமது அரச அதிகாரத்தை முழு அளவில் திருப்பி விடலாம். ஈவு இரக்கமற்ற துப்பாக்கிச் சூடு, கைதுகள், வீடுகளை தரைமட்டமாக்கல் என இது தொhடரலாம்.

இவ்வாறு யோகேந்திர யாதவ் கூறியது போல் மத நிந்தனை நிறுத்தப்படலாம் ஆனால் வீடுகள் தரைமட்டமாவது நிறுத்தப்படாது என்று முஸ்தாக் றஹ்மத் தனது கட்டுரையை முடித்துள்ளார்.

இந்திய ஊடகவியலாளர் றானா அய்யூப் எழுதியுள்ள கருத்தில் ஈரான், சவூதி அரேபியா, கத்தார் என்பன ஒரே குரலில் பேசி உள்ளன. உலகம் கடைசியாக இவ்வாறான ஒரு நிலையை எப்போது கண்டது? மோடி தான் அதனை சாதகமாக்கி உள்ளார்.

மறுபுறத்தில் வளைகுடா நாடுகள் விஷேடமாக சவூதி அரேபியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் இந்தியா மற்றும் இஸ்ரேலுடன் ஒரு இரகசியமான உறவைக் கொண்டுள்ள நிலையில் இந்த இரு நாடுகளுமே இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கைவிட்டு விட்டன.

எண்ணெய் ஷேக்மாரைப் பொருத்தமட்டில் அவர்களது சுய பாதுகாப்பும், சுய இருப்பும், சொத்துக்களும் வசதிகளும் மட்டுமே முக்கியமானவை.

உதாரணத்துக்கு சவூதி பிஜேபி தலைவர்களின் இஸ்லாத்தின் இறைதூதர் மீதான சர்ச்சைக்குரிய அவதூறு கருத்தை வன்மையாகக் கணடித்துள்ளது.

ஆனால் அதேவேளை மோடியுடனும் அவரின் பிஜேபி உடனும் நெருங்கிய தொடர்புடைய நிறுவனங்களுடனான வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்தி உள்ளது.

சில அறிக்கைகளின் படி ஹஜ் விண்ணப்பங்களை துரிதமாக ஆராய்வதற்காக பிரதமர் மோடியுடன் தொடர்புடைய துபாயில் தலைமையகத்தைக் கொண்டுள்ள ஒரு இந்திய நிறுவனத்தை தெரிவு செய்துள்ளது.

மேலைத்தேச நாடுகளில் இருந்து ஹஜ் செய்ய விரும்பும் மக்களிடம் இருந்து விண்ணப்பங்களைக் கோரி பரிசீலிக்கும் பணி இந்த நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனத்தில் குறைந்தபட்சம் ஒரு முதலீட்டாளர் பிஜேபி அரசோடு மிக நெருக்கமான தொடர்புகளைக் கொண்டவர் என தெரிய வந்துள்ளது.

உண்மையிலேயே அவர்களுக்கு இது பற்றி எந்தத் தகவலும் தெரியாதா? அல்லது முஸ்லிம்களைப் பற்றி அக்கறை இல்லையா? காரணம் பிஜேபியின் முஸ்லிம் எதிர்ப்பு நிகழ்ச்சி நிரல் எல்லோருக்கும் தெரியும் வகையில் மிகத் தெளிவாகவே இருக்கின்றது என்று றானா அய்யூப் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான இலாபகரமான வர்த்தக கொடுக்கல் வாங்கல்கள் காரணமாக பிஜேபி செயற்பாட்டாளர்கள் மேலும் செல்வந்தர்கள் ஆவர்.

அதன் மூலம் அவர்களது இஸ்லாமோபோபியா செயற்பாடுகள் மேலும் விரிவடைந்து தீவிரம் அடையும் என்று இந்திய செயற்பாட்டாளர்கள் பலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

தலைநகர் புது டில்லியில் செயற்படும் நபீயா கான் பிஜேபியுடன் தொடர்புடைய ஒரு முதலீட்டாளரைக் கொண்ட கம்பனியை ஹஜ் விஸா செயற்பாடுகளுக்கான சேவைக்காக சவூதி அரேபியா பயன்படுத்துவது மிகவும் மூர்க்கத்தனமானதும் ஆபத்தானதும் ஆகும் என்று தெரிவித்துள்ளார்.

பிஜேபி தலைமையிலான கர்நாடகா அரசு முஸ்லிம்களுக்கு எதிரான பல கொள்கைகள் மற்றும் செயற்பாடுகளின் மத்திய புள்ளியாக உள்ளது.

ஹிஜாப் கட்டுப்பாடு, (அதிகாலை வேளை) தொழுகைக்கான அழைப்பொலி (அதான் கூறல்) என்பன இதில் அடங்கும்.

கர்நாடகா மாநில முஸ்லிம்கள் தொடர்ச்சியாக மாநில பிஜேபி அரசின் நெருக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் ஹஜ் பயணத்துக்காக விண்ணப்பிக்கும் முஸ்லிம்களின் தனிப்பட்ட தரவுகள் தவறானவர்களிடம் சிக்கி மேலும் நிலைமை மோசம் அடைய வழியமைக்கக் கூடும் என்று நபீயா கான் எச்சரித்துள்ளார்.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...