சபாநாயகரை சந்தித்தார் ஓமான் தூதுவர்!

Date:

சேவைக்காலத்தை முடித்துக் கொண்டு நாட்டைவிட்டு வெளியேறும் இலங்கைக்கான ஓமானியத் தூதுவர்  ஜூமா ஹம்தான் ஹசன் அல்மலிக் அல்ஷேஹி (Juma Hamdan Hassan AlMalik Alshehhi) நேற்று (04) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது, எரிபொருள், எரிவாயு மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கு ஆதரவளிப்பதாக ஓமன் தூதுவர் தெரிவித்தார்.

அத்துடன், இலங்கை – ஓமன் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இலங்கைக்கான ஓமானியத் தூதுவரின் 8 வருட சேவைக்காலத்தில் வழங்கிய அனைத்து ஒத்துழைப்புக்களுக்கும் சபாநாயகர் நன்றியைத் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்கவும் கலந்துகொண்டார்.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...