ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தனவுக்கும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங்கிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (7) இடம்பெற்றது.
இந்த சந்திப்பு கொழும்பு ஹவ்தோர்ன் பிளேஸில் இல் உள்ள தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.
இதன்போது, சர்வதேச நாணய நிதியத்தின் எதிர்கால பேச்சுவார்த்தைகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதாகவும், எதிர்வரும் வருடத்தில் சாதகமான பலன் கிடைக்கும் என்பது உறுதிப்படுத்தப்பட்டதாகவும் வஜிர அபிவர்தன தெரிவித்தார்.
இதேவேளை நிறுவனங்களின் நேரடி வெளிநாட்டு முதலீட்டின் சாத்தியக்கூறுகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்காலப் பணிகள் குறித்தும் தூதுவருக்கு வஜிர அபேவர்தன விளக்கமளித்தார்.