ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஜின்சோ அபே மீது நாரா நகரில் உரையொன்றை நிகழ்த்தி கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
ஜின்சோ அபேயின் பின்புறத்திலிருந்தே இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டு தடவைகள் துப்பாக்கி சூட்டு சத்தங்கள் கேட்கப்பட்டதாக அந்த நாட்டு ஊடகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.