ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கட்சி தலைவர்கள் கூட்டத்தில் அனைத்து கட்சி தலைவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அரசியல் கட்சிகளின் கூட்டம் சற்று முன்னர் ஆரம்பமானது.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சித் தலைவர்கள் பதவி விலகுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் ஜனாதிபதி செயலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதையடுத்து சபாநாயகர் இன்று மாலை கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் ஜனாதிபதி செயலகத்தை பொதுமக்கள் ஆக்கிரமித்துள்ள போதிலும், ஜனாதிபதியின் இருப்பிடம் தெரியவில்லை.
இலங்கை அரசியல் வரலாற்றில் பதவி விலகும் முதல் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ திகழ்கிறார். அதேவேளை, பிரதமர் ரணிலுக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்நிலையில், பதில் ஜனாதிபதியாக சபாநாயகர் இருப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.