ஜனாதிபதி மாளிகை பணம் குறித்து பொலிஸார் அறிக்கை!

Date:

ஜனாதிபதி மாளிகையினுள் இருந்து கண்டு பிடிக்கப்பட்ட 17,850,000 ரூபாய் பணம் தொடர்பில் பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.

குறித்த பணத் தொகை தொடர்பில் நாளை தினம் நீதிமன்றத்திற்கு தௌிவு படுத்தவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

குறித்த பணத் தொகை ஜனாதிபதி மாளிகையினுள் இருந்து போராட்டக்காரர்களுக்கு கிடைத்திருந்தது.

பின்னர் குறித்த சம்பவம் தொடர்பில் அவர்கள் பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு அறிவித்திருந்தனர்.

இது தொடர்பில் கொழும்பு மத்தி பிரிவிற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு அறிவிக்கப்பட்ட பின்னர் கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் போராட்டக்காரர்களிடம் இருந்து குறித்த பணத் தொகை பொறுப்பேற்கப்பட்ட நிலையில் குறித்த பணத்தொகை தற்பொழுது கோட்டை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பின் கீழ் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...