நான் சர்வதேச ஊடகமான (பிபிசி) நேர்காணலில் தவறு செய்துவிட்டேன் என்று பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இந்திய செய்தி நிறுவனமான ஏ.என்.ஐக்கு தொலைபேசி அழைப்பில் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும், அவர் அருகில் உள்ள நாட்டில் இருப்பதாகவும், அவர் புதன்கிழமைக்குள் நாடு திரும்புவார் என்றும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று பிபிசியிடம் தெரிவித்தார்.
மேலும் தாம் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ வெளிநாடு சென்றுள்ளதாக தான் பிபிசி உலகச்சேவைக்கு வாய் தவறி கூறிவிட்டேன் என்று சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி எங்கே இருக்கின்றார், என்று பிபிசி உலகசேவை கேள்வியெழுப்பியது,
அதற்கு பதிலளித்த சபாநாயகர் அவர் அண்டை நாடொன்றுக்கு சென்றுள்ளதாகவும் 13 ஆம் திகதி நாடு திரும்புவார் என்றும் கூறியிருந்தார்.
அதன்பின் இந்திய ஊடகத்திற்கு இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ இன்னும் நாட்டில் இருக்கிறார், வாய்தவறி கூறிவிட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.