சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் பதவியை வகித்து தொழில்சார் செயற்பாடுகளில் ஈடுபடுவதில் திருப்தியடைவதால், எந்தவொரு அரசியல் பதவியையும் வகிக்க விரும்பவில்லை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.
தனது முகநூல் பதிவிலே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அதில், சட்டத்தரணியாக கடந்த காலங்களில் சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் நாட்டிற்கும் முக்கியப் பங்காற்ற முடிந்ததாகவும், இந்த இக்கட்டான நேரத்திலும் அந்தப் பணியை தொடர்வதே தனது நோக்கம் எனவும் தெரிவித்துள்ளார்.
மைத்திரி குணரத்ன, கீர்த்தி தென்னகோன் மற்றும் அசாத் சாலி ஆகிய மூன்று முன்னாள் ஆளுநர்களும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலியா பீரிஸை நியமிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார