‘கோட்டாபய சிங்கப்பூர் சென்று தனது இராஜினாமா கடிதத்தை அனுப்புவார்’

Date:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமா கடிதம் இதுவரை தமக்கு கிடைக்கவில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி இதுவரை பயண இலக்கை அடையாத காரணத்தினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், குறித்த இராஜினாமா கடிதம் இன்று வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாலைதீவுக்கு தப்பிச் சென்ற கோட்டாபய ராஜபக்ஷ சிங்கப்பூர் செல்லத் திட்டமிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அரசாங்கத்தின் உயர் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் சென்ற பிறகு அவர்  பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை சமர்பிப்பார் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

2026ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 18,000 எலிக்காய்ச்சல் சம்பவங்கள் பதிவு

நாட்டில் கடந்த ஒரு வருட காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 13,000 எலிக்காய்ச்சல்...

உணவு வகைகளின் விலைகள் அதிகரிப்பு!

நாட்டில் நிலவும் பொருளாதார சூழல் மற்றும் எரிசக்தி விலையேற்றம் காரணமாக, இன்று...

ரமழானில் இறுதி பத்து: பிக்ஹுல் இஃதிகாப்!

-முஹம்மத் பகீஹுத்தீன் இஃதிகாப் என்றால் என்ன? பொது வாழ்வின் சந்தடிகளை விட்டு தூரமாகி, அல்லாஹ்வை...

மத்திய கிழக்கு மோதல்: உலகளாவிய கச்சா எண்ணெய் விலையில் கடும் உயர்வு – EIA வெளியிட்ட அதிரடி அறிக்கை!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலுக்கு மத்தியில், அமெரிக்க எரிசக்தி தகவல்...