தேசிய எரிபொருள் உரிமம்: வணிக நிறுவனங்கள் வாகனங்களை பதிவு செய்யலாம்!

Date:

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தின் ஊடாக பல வாகனங்களைக் கொண்ட வர்த்தக நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிர்வரும் சில தினங்களில் எரிபொருளைப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் வழங்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

வர்த்தகப் பதிவு எண்ணைப் பயன்படுத்தி இந்த உரிமத்தைப் பெறுவதற்கான பதிவுகளை மேற்கொள்ள முடியும் என அமைச்சர் டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அங்கு பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு வாகனத்திற்கும் குறிப்பிட்ட QR குறியீடு வழங்கப்படும் என அவரது ட்விட்டர் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வணிக நிறுவனங்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கும் வகையில் தேசிய எரிபொருள் உரிமம் அடுத்த சில நாட்களில் மேம்படுத்தப்படும்.

Popular

More like this
Related

வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதிகளுக்கு நீர் வெட்டு !

அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதிகளில் இன்று...

ஹிரோஷிமா தினம்: மனித வரலாற்றின் ஆறாத வடுவும் அணுஆயுதங்களற்ற உலகத்திற்கான குரலும்

இரண்டாம் உலகப் போரின் உச்சக்கட்டம். 1945-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6-ஆம் தேதி,...

பாடசாலைகளுக்கு மூன்றாம் தவணை விடுமுறை: கல்வி அமைச்சு!

2026 ஆம் ஆண்டுக்கான அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுசரணையின் கீழ்...

கொழும்பில் சர்வதேச பட்டத் திருவிழா 2026!

கொழும்பில் எதிர்வரும் ஓகஸ்ட் 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள...