‘ராஜபக்ஷக்களின் நண்பன் அல்ல, நான் மக்களின் நண்பன்’: ஜனாதிபதி ரணில்

Date:

நான் ராஜபக்ஷக்களின் நண்பன் அல்ல, நான் மக்களின் நண்பன், என்று இலங்கையின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

‘ஸ்கை’ நியூஸ்’ என்ற ஊடகமொன்று ரணில் விக்கிரமசிங்கவிடம் கேள்வி எழுப்பியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் குடும்பத்தின் பழைய நண்பர் எனக் கூறியதை ரணில் ரணில் கேலி செய்துள்ளார்.

‘ஸ்கை நியூஸ்’ ஊடகவியலாளர் விக்கிரமசிங்கவை ராஜபக்ஷவின் பழைய நண்பர் என்று குறிப்பிட்டபோது, அதற்கு பதிலளித்த ஜனாதிபதி, தான் எப்போதும் ராஜபக்ஷக்களை எதிர்ப்பதாக குறிப்பிட்டார்.

மேலும், எந்தவொரு நபரையும் நேர்காணல் செய்வதற்கு முன்னர் ஆழமான விசாரணையை மேற்கொள்ளுமாறும் ரணில் விக்கிரமசிங்க ஊடகவியலாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

மற்றுமொரு கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி, மக்கள் கோரிய மாற்றத்தை வழங்குவதாக தெரிவித்தார்.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...