(File Photo)
புதிய அரசாங்கத்தின் பிரதமர் தலைமையிலான அமைச்சரவை இன்னும் சில நிமிடங்களில் பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளது.
பதவியேற்பு நிகழ்வு பிரதமர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த நிகழ்வுக்கு சற்றுமுன் வந்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதையடுத்து, நாடாளுமன்றத்தில் அவரது தேசியப்பட்டியல் ஆசனம் வெற்றிடமாகியுள்ள நிலையில், அந்த வெற்றிடத்திற்கு யாரை நியமிப்பது என்பது தொடர்பில் தற்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவும், முன்னைய அமைச்சரவையுடன் இணைந்து இன்று காலை பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட வட்டாரம் ஒன்று நேற்று ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்தது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்குள் நேற்று இடம்பெற்ற பல கலந்துரையாடல்களின் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் தி னேஷ் குணவர்தன பிரதமராக பதவியேற்கவுள்ளார்.