பொது போக்குவரத்து சேவைகளில் இயங்காத தனியார் பஸ்களின் சாரதி அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்யுமாறு இலங்கை போக்குவரத்து சபை ஆலோசனை வழங்கியுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபை ஊடாக நாளாந்தம் சுமார் 5000 பேரூந்துகளுக்கு எரிபொருள் கிடைத்தாலும் அவற்றில் 30 வீதமானவை முறையான வாகனங்களை செலுத்தாது சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக அமைச்சர் பந்துல குணவர்தன இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.