நாளை முதல் QR முறைமை: வாகன இலக்கத்தின் கடைசி எண்ணின்படி எரிபொருள் விநியோகம் நிறுத்தப்படும்!

Date:

நாடு முழுவதிலும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் QR  முறையின் கீழ் எரிபொருளை வழங்கும் முறை நாளை (ஆகஸ்ட்1) முதல் நடைமுறைப்படுத்தப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேநேரம், வாகன இலக்கத்தின் கடைசி இலக்கத்தின் திகதியில் எரிபொருள் வழங்கும் முறை நாளை முதல் இரத்து செய்யப்படும் எனவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்கு இதுவரை 4 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பதிவு செய்துள்ளனர்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிலையங்கள் மற்றும் ஐ.ஓ.சி எரிபொருள் நிலையங்கள் நாளை முதல் QR  முறைப்படி எரிபொருளை விநியோகிக்கவுள்ளன.

கடந்த சில நாட்களாக நாடளாவிய ரீதியில் உள்ள பல எரிபொருள் நிலையங்களில் இது தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...