எரிபொருள் மற்றும் எரிவாயு விலைகள் தொடர்பான அறிவிப்பு!

Date:

எரிபொருள் மற்றும் எரிவாயு விலைகள் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாதாந்த எரிபொருள் திருத்தம் இன்றிரவு திட்டமிடப்பட்டுள்ளது.  அதேநேரம் உலகளாவிய சந்தை விலைகளின் தற்போதைய போக்கு எதிர்காலத்தில் எரிபொருள் விலையில் மேலும் குறைவடையக் கூடும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

மேலும், இந்த வாரம், எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, அடுத்த எரிபொருள் விலை திருத்தத்தின் விளைவாக எரிபொருள் விலை குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி எரிபொருளின் விலைகள் 50 ருபா முதல் 100 ரூபா வரையில் குறைக்கப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒவ்வொரு மாதமும் இரண்டு தடவைகள் எரிபொருள் விலையில் மாற்றங்களை அறிவிப்பதற்கு அமைச்சு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

ஒவ்வொரு மாதமும் 1ஆம் மற்றும் 15ஆம் திகதி இரவு எரிபொருட்களின் விலையில் மாற்றத்தை அறிவிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

இதேவேளை, 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி முதல் லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களின் விலை குறைக்கப்படும் என லிட்ரோ காஸ் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...