இன்று முதல் தேசிய அடையாள இலக்கம் கொண்ட பிறப்புச் சான்றிதழ்

Date:

இலங்கையில் புதிதாக பிறந்த பிள்ளைகளுக்காக பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் வழங்கப்படும் பிறப்புச் சான்றிதழில் இன்று (1) முதல் ஆட்பதிவுத் திணைக்களத்தினால் வழங்கப்படும் தேசிய அடையாள இலக்கம் உள்ளடக்கப்படும் என ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்தார்.

இரு திணைக்களங்களும் இணையத்தளத்தின் ஊடாக தகவல்களைப் பரிமாறிக்கொள்வதன் மூலம் ஆரம்பகட்ட முன்னோடித் திட்டமாக இதனை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் கம்பஹா, தெஹிவளை, ஹகுரன்கெத்த, குருநாகல், இரத்தினபுரி, தமன்கடுவ ஆகிய பிரதேச செயலகங்களில் முன்னோடித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், பிறப்புச் சான்றிதழைப் பெற்ற அனைத்து குடிமக்களும் 15 வயதை அடைந்து, ஆட்கள் பதிவுத் திணைக்களத்தில் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பித்த பிறகு, பிறப்புச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த முறைமைய வசதியாக இருக்கும். பிறந்தது முதல் ஒரே இலக்கத்தில் தகவல்களைப் பதிவு செய்து சேமித்து வைக்கும் திறன் மக்களுக்கு இருக்க வேண்டும் என ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...

இளைஞர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு!

INSIGHT நிறுவனத்தின் புத்தளம் வளாகம் ஏற்பாடு செய்துள்ள 'இளைஞர்களை தொழில்முனைவராக்கும்  பயணம்...