மரணத்தின் பின் வாழ்வு: அல்லாமா ஹபீபின் பரிமாற்றத்துக்கான நீதித்துறை: ஒரு முற்குறிப்பு- ஆஸிம் அலவி

Date:

பல மிலேனியங்களின் வரலாற்றைக் கொண்ட மனித இனம் தற்போது இறுதி தீர்ப்பு நாளிற்கு தயாராகுபவர்களின் யுகத்தை அடைந்துள்ளது.

இவர்களை ஆங்கிலத்தில் ‘Doomsday Preppers’ என்று அழைக்கப்படுவர். இவர்கள் தங்களுடைய வீடுகளுக்கு பின்புறமுள்ள காணியில் விசேடமான பங்கர்கள் எனப்படும் பதுங்கும் மறைவிடங்களை அமைத்திருப்பார்கள்.

அதில் சில காலம் உயிர் வாழ்வதற்குத் தேவையானவற்றையும் அவர்கள் சேகரித்து வைத்திருப்பார்கள்.

பாரிய பொருளாதார வீழ்ச்சி, அனுவாயுத யுத்தம், சமூக சீரழிவு போன்ற நிலைகள் உலகளாவிய விதத்தில் ஏற்படும் பட்சத்தில் மேற்படி பங்கர்களுக்குள் சென்று தமது எஞ்சிய வாழ் நாட்களை கழிப்பது இவர்களுடைய திட்டமாகும்.

இவர்களுடைய குறுகிய இந்த மனோபாவம் காரணமாக ஏனையவர்களின் கேலிக்கு இவர்கள் இலக்காகி வந்தாலும், இது போன்று நம்புவர்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொடுக்கும் நிறுவனங்களும் ஆலோசகர்களும் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக மேற்கத்தேய நாடுகளில் இந்த போக்கை நாம் அதிகம் அவதானிக்கலாம். இக் குழுவினரை பொதுவாக ஏனையோர் நகைப்பிற்கு உட்படுத்தினாலும், உலகின் முடிவை எதிர்பார்ப்பது மனித இயல்பில் உள்ளுணர்வாகக் காணப்படுகிறது.

Doomsday Preppers  இறுதிநாள் வழிபாட்டு குழுக்களின் விசித்திரமான கதைகளை நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம். அத்தகைய எண்ணங்கள் அனைத்தும் இந்த மனித இயல்புடன் தொடர்புடையவை.

மேற்கத்தேய  மனிதன் வாழ்க்கையின் முடிவைப் பற்றிய குழப்பத்தில் வாழ்கிறார்.
ஒரு ஆபத்தை உணரும் போது அதைவிட்டு விலகி ஓடுவது மனித இயல்பாகும்.

இதன் போது தன்னுடைய உயிரை பாதுகாத்துக் கொள்ளும் மிருக சுயநலம் மனிதனில் வெளியாகி சிலவேளை நிலைமை மிக மோசமாகி விட்டால் யா நஃபஸீ என்று புலம்பியவனாக தன்னைச் சார்ந்தவர்கள் அனைவரையும் மறந்து பக்கா சுயநலமியாகவும் மனிதன் தரம் தாழந்துவிடலாம்.

இஸ்லாம் எதிர்வு கூறியுள்ள யவ்முல் கியாமா என்கின்ற இறுதி தீர்ப்பு நாளானது மனிதனின் இந்த தன்மை அப்பட்டமாக வெளியாகும் ஒரு பயங்கர நாளாக இருக்கும்.

அந்நாளில் அவன் தன்னுடைய தாய், தந்தை மனைவி பிள்ளைகள் என்று எவரையும் பொருட்படுத்தாது தன்னுடைய நிலை, தன்னுடைய முடிவு என்னாகுமோ என்ற ஒரே பீதி காரணமாக மஹ்ஷர் திடலில் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருப்பான் என திருமறை கூறுகின்றது.

நிலைமை எந்தளவு மோசமாக இருக்கு மெனில் தனது சிசுவை அன்பாக கட்டியனைத்து பாலூட்டிக் கொண்டிருக்கும் தாய் அச் சிசுவை மறந்து கை விட்டு விடுவாள். தன் கருவில் உள்ள குழந்தை பிரசவமாவதை ஒரு கர்ப்பிணி சிறிதும் உணரமாட்டாள்.

Eschatologists எனப்படும் இறுதி நாள் மற்றும் மரணத்திற்குப் பின் உள்ள வாழ்வு பற்றிய அறிவைப் பெற்றவர்கள் இம் முக்கியவிடயம் பற்றி காலா காலம் அச்ச மூட்டி வந்துள்ளார்கள்.

முடிவில்லாத சுகம் கிடைக்கும் ஒரு வாழ்வு என்பது பொதுவாக எந்த மனிதனுக்கும் இயல்பாகவே விருப்பமான ஒன்று என்பது தெளிவான உண்மையாகும்.

இந்நிலையில் உலக வாழ்க்கையைப் பற்றி அவனது மனதில் எழும் பல கேள்விகளுக்கு விடையளிக்க eschatology இன்றியமையாததாகிறது.

அல்லாமா ஹபீப் முடிவில்லாத மறுமை வாழ்வு என்பது இஸ்லாத்தின் அடிப்படை கோட்பாடாகும். எனவே, இதுபற்றி ஏராளமான திருமறை வசனங்களும் நபி மொழிகளும் இருப்பதை நாம் காணலாம்.

இருந்தாலும் இறுதிநாள் எப்போது நிகழும் என்பதை தெட்டத் தெளிவாக திருக்குர்ஆனில் குறிப்பிடப்படவல்லை. எனவே, இறுதித் தூதரும் இது நிகழும் நாள் பற்றி திட்டவட்டமாக கூறவில்லை.

ஆனால் இறுதி தீர்ப்புநாள் அன்மிப்பதற்கான பல அடையாளங்களை நபிகள் (ஸல்) அன்னவர்கள் கூறியுள்ளார்கள். கியாமத் நாள் தொடர்பான சிறிய மற்றும் பெரிய அடையாளங்கள் இதில் உட்படும்.

அல் ஹபீபின் பாத்திரம் முக்கியத்துவம் பெறும் இடம் இதுவே. இவ்விடயத்தில் அவருடைய செயற்பாடுகியாத் தினம் மற்றும் மரணத்திற்குப் பின் வாழ்வு பற்றிய அறிஞர் ஒருவருடையது போலன்றி நிலைமாற்றம் சார்ந்த பிக்ஹ் பற்றி முற்றிலும் புதியதொரு கோணத்தை முன்வைக்கும் ஒருமுஜ்தஹித் மற்றும் ஒரு இமாம் போன்றுள்ளது.

யெமன் தேசத்தில் பிறந்த,காதிரிய்யா தரீக்கவைச் சேர்ந்த இமாம் ஒருவராகிய அல்லாமா ஹபீப் (ரஹிமஹுல்லாஹ்) கடந்தவாரம் அதாவது 2022 ஜுலை 27 ஆம் திகதி தன்னுடைய இறைவனை சந்திக்க இவ்வுலகை விட்டும் பிரிந்துசென்றார்.

அன்றைய தினம் இந்த உம்மத்து தஸவ்வுஃப் பாரம்பரியத்தின் ஒரு மகத்தான ஆன்மீக வழிகாட்டி இழந்துவிட்டது என்றால் அது மிகையல்ல.

நிலைமாற்றம் சார்ந்த பிக்ஹ் எனப்படும் பிக்ஹுத் தஹவ்வுலாத் பற்றி அல்லாமா ஹபீபி ஆற்றிய பல உரைகளை கேட்டதன் பின் அவர் மீதான என்னுடைய ஆர்வம் அதிகரித்தது.

‘ஜிப்ரிலுடைய ஹதீஸ் என்ற பிரபலய்ம் பெற்றதொரு நபி மொழியின் மீதே அல்லாமா ஹபீபின் பிக்ஹுத் தஹவ்வுலாத் சிந்தனை நிறுவப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்ஹுத் தஹவ்வுலாத் எனும் கண்ணோட்டம் ஊடாக நவீன உலகின் சமூகமற்றும் கலாசார அபிவிருத்திகளை காணும் படி அல்லாமா அவர்கள் உம்மத்தை தூண்டி வந்ததோடு மனித வர்க்கம் இது வரை சந்தித்த மற்றும் சந்திக்க விருக்கும் அனைத்து முக்கிய நாகரீக பரிமாற்றங்கள் பற்றியும் இறை தூதர் (ஸல்) அவர்கள் முன்பே கூறியுள்ள படியால் அவை அனைத்தையும் ஏகவல்லோனிடமிருந்தே நபியவர்கள் (ஸல்) அறிந்து கொண்டார்கள் என்பதை ஆதார பூர்வமாக ஹபீப் நிரூபித்துள்ளார்.

மேலும் இந்த தத்துவங்களை மனிதன் புரிந்து கொள்ளும் போது உலக வாழ்க்கை என்பது சிக்கலற்றதாகவும் இலகுவானதாகவும் ஆகிவிடும் என்றும் அல்லாமா வலியுறுத்திவந்தார்.

அல்லாமா ஹபீப் முன்வைக்கும் மிக ஆணித்தரமான தொரு உதாரணம் இறைதூதரின் (ஸல்) பேரன் ஹஸன் இப்னு அலி (ரலி) தொடர்புடையதாகும்.

அதாவதுஹஸன் (ரலி) கிஹ்லாஃபத் தலைமைத்துவம் பற்றிய பிரச்சினையை தீர்த்த விவேகமான மற்றும் தூர நோக்குள்ள விதம் பற்றியதாகும்.

இதன் போது தனது பாட்டனார் கிலாஃபத் பற்றிக் கூறிய ஒரு விடயத்தை ஹஸன் (ரலி) கருத்தில் கொள்வதை அல்லாமா சுட்டிக்காட்டுகின்றார்.

அதில் இறைத்தூதின் முறைமையிலான ஃகிலாஃபத் முடிவுற்றுபரம்பரை ஆட்சி முறையில் அது தொடர்வது பற்றி நபிகள் (ஸல்) அன்னவர்கள் எதிர்வு கூறியுள்ளார்கள்.

முஆவியா பின் அபூ ஸுஃபியானின் (ரலி) ஆட்சிக்காலத்தில்; ஃகிலாபத்தின் உரிமை பற்றிய சர்ச்சை ஏற்பட்ட போது, தனக்கு அதற்கான உரிமை இருந்தும் ஃகிலாபத்தின் பரிமாற்ற சமயம் வந்துள்ளதை மேற்படி நபி மொழி மூலம் புரிந்து கொண்ட ஹஸன் (ரலி) அதை முஆவியாவிட்கு (ரலி) விட்டுக்கொடுத்தார்.

ஆனால் இஸ்லாமிய ஆட்சி குர்ஆன் மற்றும் சுன்னாவின் அடிப்படையிலேயே நடைபெற வேண்டும் என அவர் ஒரு நிபந்தனையை இட்டார்.

இந்த வகையில் முஸ்லிம் உம்ம்தில் ஏற்படவிருந்த ஒரு பாரிய பிளவை, நபிமொழியை  காலசூழலுக்கு ஏற்ப புரிந்து கொண்டு புத்தி சாதுர்யத்துடன் செயற்படாமையால் தவிர்க்கப்பட்ட விதத்தை இங்கு அல்லாமா ஹபீப் கோடிட்டுக் காட்டுகின்றார.

இவ்வகையில் பிக்ஹுத் தஹவ்வுலாத்தின் முக்கியத்துவத்தை அல்லாமா வலியுறுத்தி அதை இஸ்லாத்தின் சட்ட இயற்றலில் முக்கியமானதொரு தூண் என வலியுறுத்தி தனது வாழ்வின் பெரும் பகுதியை அதன் மேம்பாட்டிற்காக செலவு செய்தார்.

இதற்காக பல உரகைளை ஆற்றிய அல்லாமா, இஸ்லாமிய இளம் சமுதாயத்தினரை இலக்காகக் கொண்டு இவ் விடயத்தை மையமாக வைத்து பலகட்டுரைகளையும் எழுதினார்.

மார்க்கப் பேணுதல் என்பது பெரியவர்கள் மற்றும் முதியவர்களுடைய கடமை என்ற போக்கை மாற்றி மார்க்கப் பேணுதல் மற்றும் அதப் எனப்படும் நல்லொழுக்க விழுமியங்களை இளம் வயதினர் கடைபிடிக்க வேண்டியதன் அவசியம் பற்றி அல்லாமா ஹபீப் தனது ஆக்கங்களில் வலியுறுத்தி வந்தார்.

குறிப்பாக அல்லாமா அவர்களின் அனுகுமுறை கீழ் காணும் 4 அம்சங்கள் மீது அமைந்திருப்பதை அவதானிக்கலாம்:

1. அமைதிக்கான வழி முறையை புதுப்பித்தல் – இஸ்லாத்துடன் அடையாளம் காணும் எந்தவொரு இஸ்லாமிய குழு அல்லது தனி நபருடனும் மோதலற்ற தொடர்பை பேணுதல்.

முரண்பட்ட கருத்துக்களைக் கொண்ட முஸ்லிம் குழுக்களுடன் வாதிடுவதை அல்லாமா ஹபீப கடுமையாக வெறுத்தார்.

2. பிக்ஹுத் தஹவ்வுலாத்- முஸ்லிம்களும் பொதுவாக உலகமும் குறிப்பாக முஸ்லிம்கள் அனுபவிக்கும் இன்னல்கள் (ஃபித்னா) காரணமாக எழும் விரக்தியிலிருந்து இளைய தலைமுறையினர் இடத்தில் வாழ்க்கை பற்றிய நம்பிக்கையை வளர்ப்பது. மற்றும் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவெடுக்கும் ஆற்றலை வளர்ப்பது.

3. தஸவ்வுஃப் பாரம்பரியத்தின் அடிப்படையில் தஃவா சேவையை புதுப்பித்தல் – இஸ்லாத்தின் இந்த வளமான பொக்கிஷத்தைப் பாதுகாத்து வளர்ப்பது உம்மத்தின் கடமையாகும்.

மதத்தின் பெயரால் மூட நம்பிக்கைகள் மற்றும் புதுமைகள் என்று அழைக்கப்படுவதைத் தவிர்க்க முஸ்லிம் உம்மத்தின் ஒரு பிரிவினரை அழைக்கும் அளவுக்கு துணிச்சல் மிக்கவராக அல்லாமா ஹபீப் திகழ்ந்தார்.

4. நிறுவனங்களை நிறுவுதல் – யேமன் மற்றும் ஏனைய பலநாடுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் மற்றும் கற்றல் மையங்களை நிறுவும் பாக்கியத்தை அல்லாமா ஹபீப் அவர்களுக்கு அல்லாஹ் வழங்கினான்.

இதன் பயனாக முஸ்லிம் உலகம் முழுவதும் அமைதியான மனோபாவமும், சிறந்த அறிவும் கொண்ட இலட்சக்கணக்கான மாணவர்கள் உருவாகியுள்ளனர்.
அறிஞர்கள் மற்றும் இறையச்சமுள்ள தலைவர்களின் மரணம் உம்மத்திற்கு நல்ல தல்ல என நபி (ஸல்) அவர்கள் கீழ் வருமாறு எச்சரித்தார்கள்:

‘நிச்சயமாக, அல்லாஹ் தனது அடியார்களிடமிருந்து அறிவைப் பறிப்பதன் மூலம் அறிவைத் தடுக்கமாட்டான். மாறாக அறிஞர்களின் ஆன்மிகத்தை போக்குவதன் மூலமே அறிவைத் தடுக்கின்றான்.

இதன் காரணமாக எந்த அறிஞரும் எஞ்சியிருக்காத நிலைதோன்றி மக்கள் அறிவற்ற தலைவர்களைப் பின்பற்றும் நிலை ஏற்படும். அதுபோன்ற அறிவீனர்களிடம் மக்கள் தீர்ப்புக்களை கேட்பார்கள்.

அந்த அறிவீனர்களும் மார்க்க அறிவு இன்றியே தீர்ப்புகளை வழங்குவார்கள். இதனால், அவர்களும் வழி தவறி மற்றவர்களை வழி தவறச் செய்வார்கள்’ (ஷஹிஹ் அல்-புகாரிமற்றும் ஷஹிஹ் முஸ்லிம்).

பிக்ஹுத் தஹவ்வுலாத் பின்னணியில் இந்த ஹதீஸைப் புரிந்து கொள்வதன்  மூலம், சிறந்த அறிவு மற்றும் உன்னத குணாதிசயங்கள் கொண்ட அல் ஹபீப் போன்ற இளம் தலைமுறை அறிஞர்கள் மற்றும் தாய்களை உருவாக்க அர்த்தமுள்ள முயற்சிகளை எடுப்பதன் மூலம் மட்டுமே இத்தகைய ஆபத்து மற்றும் அறிவுசார் பேரழிவை திறம்பட தடுக்க முடியும்.

அல்லாமாஅல் ஹபீப் அபூபக்ர்: அல் மஷ்ஹுர் (ரஹிமஹுல்லாஹ்)
நிலைமாற்றம் சார்ந்த பிக்ஹ்
முஹம்மத் ஆஸிம் அலவி
எழுத்தாளர் மற்றும் கல்வி ஆலோசகர்.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...