இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சாதாரண பஸ் கட்டணங்கள் 11.14 வீதத்தால் குறைக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, குறைந்தபட்ச பஸ் கட்டணம் ரூ.38ல் இருந்து ரூ.34 ஆக குறையும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் விசேட ஊடகவியலாளர் மாநாடு இன்று இடம்பெற்றபோதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டீசல் லீற்றர் ஒன்றின் விலையை 10 ரூபாவால் குறைத்ததன் பயனை பயணிகளுக்கு வழங்கும் வகையில் பஸ் கட்டணங்கள் குறைக்கப்படவுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிராண்டா தெரிவித்தார்.
மேலும் கொவிட் பரவுவதைக் கருத்தில் கொண்டு, பேருந்துகளின் இருக்கைகளுக்கு ஏற்ப பயணிகளை மட்டுமே ஏற்றிச் செல்லுமாறு சுகாதாரத் துறை வழங்கிய அறிவுறுத்தல்களின்படி, பேருந்து கட்டணத்தை 20 சதவீதம் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும் தற்போதுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, பேருந்துகள் தற்போது சட்டத்தை மீறுவதால், உயர்த்தப்பட்ட கட்டணத்தை 10 சதவீதத்தால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், டீசல் விலையில் 10 ரூபா போன்ற சிறிய தொகை குறைக்கப்பட்டுள்ளமை கருதி பஸ் கட்டணத்தை குறைக்க முடியாது என தனியார் பஸ் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.