நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண சர்வகட்சி அரசாங்கம் மிகவும் முக்கியமானது: அமரபுர மகா நிகாயவின் அதியுயர் மகா தேரர்

Date:

நாட்டின்  பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வைக் காண்பதற்கு சர்வகட்சி அரசாங்கம் மிகவும் முக்கியமானது என இலங்கை அமரபுர மகா நிகாயவின் அதியுயர் மகா தலைவர் அக்கமஹா பண்டித வண. தொடம்பஹல சந்தசிறி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ராஜகிரிய, கலப்பலுவ, கோதம தபோவன விகாரைகளுக்குச் சென்று அமரபுர மகாநாயக்க தேரரை சந்தித்து ஆசி பெற்றார்.

பொருளாதாரக் கொள்கையொன்றை அமுல்படுத்துவதன் மூலம் நாட்டின் நெருக்கடியான பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்குவதற்கு பலமான அரசாங்கம் அவசியமானது என்றும்  தேரர் தெரிவித்தார்.

தேரர் தலைமையிலான மகாசங்கரத்தினருடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட பின்னர் தாது மன்றத்திற்குச் சென்று சமய அனுஷ்டானங்களை மேற்கொண்ட பின்னர் மகா சங்கரத்ன சேத்பிரித்தை ஓதி ஜனாதிபதியை ஆசீர்வதித்தனர்.

தொடர்ந்து பேசிய அவர், விவசாயத்திற்கு முன்னுரிமை அளித்து நாட்டை தன்னிறைவடையச் செய்வதற்கு தேவையான வேலைத்திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டும் என்றார்.

எதிர்கால உலகை வெல்லக்கூடிய திறன்கள் மற்றும் பொருத்தமான பாடங்களை அடிப்படையாகக் கொண்ட தொழில் வாய்ப்புக்களை இலக்காகக் கொண்ட தேசிய கல்விக் கொள்கையொன்று பாடசாலை பாடத்திட்டத்தில் உள்ளடக்கப்பட வேண்டுமெனவும் தேரர் சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்வில் இலங்கை அமரபுர மகா நிகாயாவின் பொதுப் பதிவாளர் கலாநிதி பல்லேகந்த ரத்தினசார தேரர் மற்றும் அந்த பிரிவை பிரதிநிதித்துவப்படுத்தும் சங்க சபைகளின் மகா சங்கத்தினரும் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...