எதிர்வரும் வார இறுதியில் மின்வெட்டு இருக்காது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க இன்று (5) பிற்பகல் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இன்று (ஆகஸ்ட் 5) இரவு ஒரு மணி நேரம் மாத்திரம் மின்வெட்டு அமுலில் இருக்கும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, இரவு நேரத்தில்’ ஏ’ முதல் ‘டபிள்யூ’ வரை ஒரு மணி நேரம் மின்வெட்டு இருக்கும்.