சீரற்ற வானிலையால் 13 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு!

Date:

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 4 பேர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் கண்டி, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் விசேட விழிப்புணர்வு பிரிவின் பணிப்பாளர் சுகத் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சீரற்ற காலநிலையினால் 65 பிரதேச செயலகப் பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும் கடும் மழை மற்றும் இயற்கை அனர்த்தங்கள் காரணமாக மூவாயிரத்து 471 குடும்பங்களைச் சேர்ந்த 13,739 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், 137 குடும்பங்களைச் சேர்ந்த 574 பேர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 1149 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், 141 வணிக நிறுவனங்களும் சேதமடைந்துள்ளன.

Popular

More like this
Related

வாகன இலக்கத் தகடு : புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து

மோட்டார் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை அச்சிடும் பணியைப் புதிய நிறுவனமொன்றிடம் ஒப்படைப்பதற்கான...

நீர்கொழும்பு, கட்டான பகுதிகளில் நீர்வெட்டு

நீர்கொழும்பு மற்றும் கட்டான ஆகிய பகுதிகளில் நாளை மறுதினம் (12) முற்பகல்...

‘தூதர்களை வெளியேற்றினால் ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும்’: ஐரோப்பா, அரபு நாடுகளுக்கு ஈரான் நிபந்தனை.

மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானிய புரட்சிகர...

Rebuilding Sri Lanka: இலங்கையை மீளக் கட்டியெழுப்ப WAMY அமைப்பிடமிருந்து நிதி உதவி!

கடந்த 2025 டிசம்பரில் இலங்கையின் பல பகுதிகளைச் சூறையாடிய 'டிட்வா'  சூறாவளியினால்...