இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நஷ்டம் அடைவதற்கான முக்கிய காரணங்கள்: காஞ்சன விஜேசேகர!

Date:

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) நஷ்டம் அடைவதற்கான முக்கிய காரணங்களை எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நஷ்டம் அடைய பின்வரும் காரணங்களை அமைச்சர் வெளிப்படுத்தினார்.

1. பல ஆண்டுகளாக மானிய விலையில் பொருட்களை விற்பனை செய்தல்.

2. ரூபாய் பெறுமதி சரிவு – மார்ச் மாதத்திற்கு முன் செய்யப்பட்ட கொள்முதல் 90 முதல் 180 நாட்களுக்கு 203 ரூபா வீதம். தற்போது அதனை திருப்பிச் செலுத்தும் தொகை ரூ.367 முதல் 390 ரூபாவாக மாறி உள்ளது.

3. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை – 300 மில்லியன் அமெரிக்க டாலர், இலங்கை மின்சார சபை செலுத்த வேண்டியது 60 பில்லியன் ரூபா.

4. நிதி நிலைமை காரணமாக அதிக பிரீமியங்கள், மற்றும் வங்கி வட்டி வீதம்.

5. CPC யில் அதிக பணியாளர்கள், திறமையற்றவர்கள் மற்றும் அதிக ஊதியம்

6. 2012 முதல் கூட்டு ஒப்பந்தத்தில் 25% சம்பள உயர்வு

7. சுத்திகரிப்பு நிலையத்தை இயக்காதது மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட பொருட்களை அதிகம் சார்ந்துள்ள காரணம்.

8. அதிக விநியோக செலவுகள் காணப்படுதல் போன்றவையே இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தை நட்டத்தில் இயங்க வைத்துள்ளது என அவர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...