பேருந்துகள், முச்சக்கரவண்டிகளுக்கு எரிபொருளை விநியோகிக்க தனி QR குறியீடு!

Date:

பொதுப் போக்குவரத்தில் இலங்கை போக்குவரத்து பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகளுக்கு தேவையான எரிபொருளின் அளவைக் கண்டறிந்து டிப்போ மற்றும் எரிபொருள் நிலையங்களில் இருந்து தனி QR குறியீட்டின் மூலம் எரிபொருளை வழங்கும் வேலைத்திட்டத்தை எதிர்வரும் வாரத்திற்குள் நடைமுறைப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது.

இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் வரை இலங்கை போக்குவரத்து சiபா மற்றும் பஸ்டன் மாவத்தையில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூலம் தேவைகளை பூர்த்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மேலும், தொழில்சார்ந்த முச்சக்கரவண்டிகள் மற்றும் டெக்சிகளை தனித்தனியாக இனங்கண்டு, அவற்றிற்கு வழங்கப்படும் பொதுவான எரிபொருள் ஒதுக்கீட்டிற்கு மேலதிகமாக அதிக எரிபொருளை வழங்குவதற்கு தேவையான வேலைத்திட்டத்தை தயாரிப்பது தொடர்பாக இன்று காலை போக்குவரத்து அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டுள்ளது.

போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் மாகாண சபைகள் இணைந்து வாகனங்களை ஒழுங்குபடுத்துவதுடன், எரிசக்தி அமைச்சுக்கு தகவல்களை வழங்கி எதிர்வரும் வாரத்தில் இது தொடர்பில் தேவையான தீர்மானங்களை மேற்கொள்ளவுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...