இன்று (ஆகஸ்ட் 9) செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1 மணிக்கு பாராளுமன்றம் கூடுகிறது.
இதன்போது வரவு செலவுத் திட்ட திருத்தச் சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன், அரசியலமைப்பின் 22ஆவது வர்த்தமானி திருத்தம் நாளை சமர்ப்பிக்கப்படவுள்ளது.
கொள்கைப் பிரகடனம் மீதான ஒத்திவைப்பு விவாதத்தை நடத்துமாறு பல கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், இந்த வாரம் மூன்று நாட்களுக்கு நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறவுள்ளன.