உள்நாட்டு எரிவாயு விலைக்கான திருத்தப்பட்ட விலை சூத்திரத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தொடர்ச்சியான உள்நாட்டு எரிவாயு விநியோகத்தை உறுதி செய்யும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அந்த விலை சூத்திரத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் 5 ஆம் திகதி உள்நாட்டு எரிவாயு விலையை திருத்துவதற்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இது தொடர்பான பிரேரணையை சமர்ப்பித்துள்ளார்.