எண்ணெய் சுத்திகரிப்பு ஊழியர்களுக்கு உதவித்தொகை?: எரிசக்தி அமைச்சர் விளக்கம்

Date:

கடந்த சில மாதங்களில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய ஊழியர்களுக்கு மேலதிக நேர கொடுப்பனவாக 250 முதல் 300 கோடி ரூபா வழங்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இன்று (10) பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர்  லக்ஷ்மன் கிரியெல்ல கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது, மூடப்பட்ட எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 40 கோடி ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அது பெரிய குற்றம் என சபையில் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த எரிசக்தி அமைச்சர், மேலதிக நேர கொடுப்பனவுகளை வழங்கியவர்கள் யார் என்பதை கண்டறிந்து பாராளுமன்றத்தில் அறிக்கை சமர்பிப்பதாகவும் மேலதிக நேர கொடுப்பனவுகளை வழங்குவது மேலும் நிர்வகிக்கப்படும் என்று அவர் கூறினார்.

மேலும், அந்த ஊழியர்களுக்கு 250 முதல் 300 கோடி வரை மேலதிக நேர கொடுப்பனவுகளாக வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மார்ச், ஏப்ரல் மாதங்களில் சுத்திகரிப்பு நிலையம் மூடப்படவில்லை. கடந்த மாதம் தான் மூடப்பட்டது. ஏழு நாட்களும் எரிபொருள் வெளியிடப்பட்டது.

எனவே அந்த ஊழியர்களுக்கு ‘ஓவர் டைம் அலவன்ஸ்’ மேலதிக கொடுப்பனவு கொடுக்க வேண்டும். கொடுப்பனவுகள் ஓரளவு நிர்வகிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...