தேசிய சமாதானப் பேரவை மற்றும் ரம்ய லங்கா அமைப்பு என்பன தற்போது கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தோட்டப்பயிர்ச்செய்கை வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்டபாடுகள் செயற்பட்டு வருகின்றன.
இந்த வேலைத்திட்டம் கேகாலை, வவுனியா, புத்தளம், மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. அத்துடன் இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 300 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த 1500 பயனாளிகளுக்கு விதைகள் மற்றும் உரம் இலவசமாக வழங்கப்படும்.
இந்த ஐந்து மாவட்டங்களிலும் ஐந்து குழு பண்ணைகள் தொடங்கப்பட உள்ளன. இதற்கு தேவையான நிலம் தற்காலிகமாக மதஸ்தலங்கள் மற்றும் மாவட்ட சர்வமதக் குழு உறுப்பினர்களால் வழங்கப்படவுள்ளது.
இதற்கான ஆதரவை ரம்யா லங்கா அமைப்பு வழங்குவதுமட்டுமல்லாமல் இந்நிகழ்ச்சி DIRC யால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மற்றும் அந்தந்த பிரிவுகளின் பிரதேச செயலாளர்களின் ஆதரவைப் பெற்று இவ்வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்டபாடுகள் செயற்பட்டுள்ளது.