கோட்டாபயவின் விஜயம் குறித்து தாய்லாந்து பிரதமர் விடுத்துள்ள அறிக்கை!

Date:

தாய்லாந்தில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை 90 நாட்கள் தங்கியிருக்க தாய்லாந்து அரசாங்கம் அனுமதித்துள்ளது.

கோட்டாபய  ராஜபக்ஷ தனக்கு நிரந்தர அடைக்கலம் கொடுக்க விரும்பும் நாட்டைத் தேடுவார் என தாய்லாந்து பிரதமர்  பிரயுத் சான் ஓ சா தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்சவின் சிங்கப்பூரில் தங்குவதற்கான விசா இன்று (11) முடிவடைந்தது.

மேலும் தாய்லாந்தின் பிரதமர்  மனிதாபிமான அடிப்படையில்  கோட்டாபய  தாய்லாந்திற்கு வர அனுமதிக்கப்பட்டார் என்றும், வேறு நாட்டில் நிரந்தர புகலிடம் கோரி தாய்லாந்தில் எந்த அரசியல் பணிகளையும் செய்ய மாட்டேன் என்றும் கோட்டாபய ராஜபக்ச உறுதியளித்தார்.

கோட்டாபய  ராஜபக்சவிடம் இராஜதந்திர கடவுச்சீட்டு இருப்பதால் அவர் தாய்லாந்தில் 90 நாட்கள் தங்க முடியும் என தாய்லாந்து வெளிவிவகார அமைச்சர்  டொன் பிரமுத்வினை தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...