அருட்தந்தை ஜீவந்த பீரிஸை பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!

Date:

சட்டத்தரணிகள் ஊடாக இன்று (ஆகஸ்ட் 12) நீதிமன்றத்தில் ஆஜராகிய அருட்தந்தை ஜீவந்த பீரிஸை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபரான ஜீவந்த பீரிஸை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

எனினும் இந்தக் கோரிக்கையை நிராகரித்த கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே, தந்தை ஜீவந்த பீரிஸை தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், தந்தை ஜிவந்த பீரிஸ் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்து நாளை பொலிஸாரிடம் சென்று வாக்குமூலம் வழங்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இந்த புகார் மனுவை  மீண்டும் ஆக. 26ஆம் திகதி  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...